20120321

நதிகள்

 

அதிகாலையில்

அமைதியை கிழித்து இயற்றப்படும்

முதற்காற்றைப் போல் உன் நினைவுகள்


என் ஆத்மா  பாடலிசைக்கும் நேரம்

நீயில்லை என உணர்ந்த போது

நான் வேதனையுற்றேன்



நீர் ஊற்றுக்களை

உள்ளுணரும் பழங்கால மனிதன் போல்

நீண்டகாலம் அலைந்தேன்

வனாந்தரங்களின் மணற்படுகையின் கீழ்

நதிகள் பாய்வதை நான் கண்டுகொண்டேன்.



1992

மூன்றாவது மனிதன் இதழ் 10 (ஜனவரி 2001)

கருத்துகள் இல்லை: