20120321

அந்த நாட்கள் நெருங்கி விட்டன

 

மயானத்தின் பரப்பில்

கிடைத்த சிறுநிழலில் இருந்து

சிறுகல்லால் இன்னோர் குறுணியை

ஓங்கியடிக்கும் கணத்தில் பொறிதட்டியது

அந்த நாட்கள் நெருங்கி விட்டன!



வீரத்தைத் தழுவிய பெண்ணின்

தேகத்தைச் சூழ்ந்த அனல்

என் மணிக்கட்டின் மயிரைப் பொசுக்கிற்று!

அவளின் கபாலம் வெடிக்கு முன்

மண்ணில் குத்தென வீழ்ந்த

இன்னோர் சிறுமியின் மரணத்தை வருடினேன்!

மூன்று பிடி மண் எறிவதற்கு

கற்பூரம் கரைந்தெரிவதையே பார்த்திருந்தேன்!



அகால மரணங்கள் இல்லையெனில்

காரிருள் எம்மைக் கவர்ந்து கொள்ளும்!

காற்றும் நெருங்கி கண்கொண்டு உறுத்திப் பார்க்கும்!



சூல் கொண்ட மேகம் கலையும்

ஆனாலும்

மண் பிளந்து தளிர் படர

வியர்வைத் துளிகள் முகிலாய்

மழையாய்ப் பொழியும்!



தேகத்திலிருந்து பாய்ந்த இரத்தம்

உறைவதற்கு முன் நான் திருப்தியுள்றேன்@

அந்த நாட்கள் நெருங்கி விட்டன!



31.12.1990

கருத்துகள் இல்லை: