20120321

இரண்டாம் ஆட்டம்


சூதிலே வல்லான் சகுனி

தொழில்வலியால் மாதரசே

நின்னுடைய மன்னவனை வீழ்த்திவிட்டான்.

                                                                (பாஞ்சாலி சபதம்)



சொல்லாமல் போனவரை வைத்தாடி
சோற்றுப் பார்சல் வைத்தாடி நகைநட்டு வைத்தாடி
சொல்லிவந்த தத்துவமெல்லாம் வைத்தாடி
வீடுவாசல் வைத்தாடி
குஞ்சுகுமர்களை வைத்து  தொடர்தாடும் சூதின் முடிவுக்காய்.


வேரற்ற இணையத்தளங்களில்
னிதச்சிதைவு தரும் நெருக்கீடுகளை தாண்டி
அந்தச் செய்தி உருவாகிக்கொண்டிருந்தது.


எவரையும் அதிர்ச்சியுட்டும் முடிவாய்
அது இருந்திட வாய்ப்பில்லை.
எனினும் முடிவையறியும் தவிப்பு.

அதையும் மீறி அழுத்தும்
ஆண்டாண்டு காலம் உரம்போட்ட அடையாளச் சிக்கல்

 வரத்துடித்துக்கொண்டிருந்த செய்தியின் மதிப்பு
காலாவதியாகிக்கொண்டிருப்பதாகவே பட்டது.
ஓசை பெற்ற வாழ்வை மதிப்பிறக்கும் காலத்தை
ஊதுகுழல்கள் ஆரம்பிப்பதற்கிடையில்

வெறுமை தந்த கனத்த அடி எல்லோர் முதுகில் விழுந்தது
இரண்டாந்தடவையாய்.
சபதங்கள் உரைக்கத் தானும் அவகாசமின்றி.
மண்சுமந்த மேனியர் பிடுங்கியெறிப்பட்டனர் காட்டாற்றில்

 எளிதில் மறந்திடமுடியா முகங்கள் மீள வலம் வருகிறது.
இரத்த சகதிக்குள் தமைப்புதைத்திருந்த சிசுக்கள்
ஏராளம் சிசுக்கள்  குழங்தைகள்
இன்னும் இரவிரவாய் எனைத் தொடர்கிறது.

 கடந்தகாலங்களின் மதிப்புகள் பேரில்
இன்னோர் ஆட்டம் ! காய்கள் உருளட்டும் !
நான் தோற்ற இந்த இரவு இன்றைய பகலுக்குரியதா
நாளைய பகலுக்குரியதா


2009.10.19


வெளியீடு: www.ponguthamil.com on 2010/06/03) 

கருத்துகள் இல்லை: