20120321

வார்த்தை

ஆதியில் வார்த்தை இருந்தது
ஜலத்தில் அலைந்தபடி


கருத்தை முந்தும் கதைகள் இருந்தன
பரம்பரையலகுகளை சுமந்தபடி

திசைகளுக்கு புலம்பெயர்ந்த பறவைகளின் அவலவார்த்தை
பாழ்வெளியில் படர்ந்திருந்தது.

பேச்சுரைக்க வார்த்தையற்று
தோற்ற முகங்கள் தொங்கின வீட்டுச் சுவர்களில்

தலைமக்கள் வழிவந்த வார்த்தை முதுசொம்மாய் வந்தது
வழக்கொழிந்த மொழிபோல்
மலிந்ததும் சந்தைக்கு வந்தன.

ஆதியில் இருந்த ஜலம் அழுக்கடைந்து போனதால்
வார்த்தையின் ஜீவன் அடங்கிப் போனது.

சாரமற்ற வார்த்தையூடன்
சரிதை தொடர்கிறது.




தூண்டி இதழ் 7 ( ஜனவரி-மார்ச் 2004, பக்கம் 14)

கருத்துகள் இல்லை: