20120321

காலத்துயர்



போகிற போக்கில்

விளம்பர வரிகளுடன் இனங்கண்டு விட்டு

சம்பந்தமில்லாதது போல்

போகப் போகிற மனிதரை எண்ணிச்

சஞ்சலப்படுகிறேன்.


முகமூடிகளின் நகரத் தெருக்களில்

அவளைப் பற்றி

பளிச்சிடும் வரியை

இனியும் எழுதாமலிருக்க முடியாது!

சும்மா கொட்டிவிட்டுப் போகிற

வார்த்தையைப் போலவா.


ஆன்மாவைத் துறைத்தெடுக்கிற

சேதிகளைத் விதைத்துப்போனவள்.


நம்ப முடியா சாகஸங்களை

நிகழ்த்திக் காட்டியவள்!


செவ்வான விளிம்பெங்கும்

பொங்கும் கடலில்

கடலடியில் திரிந்தவள்!


கடலில் படைக்கப்பட்டதும்

கரையில் மீட்கப்பட்டதும்

காதோடு காதாய் காற்று வழி போனது!


மீளவும் ஆசீர்வதிக்கப்பட்ட

மரணத்தைத் தேடிப் போனாள்

பேராறாய் கடலில் காவியமானாள்!


வரலாற்று முள்ளில்

செருக்கப்பட்ட சிறு மொட்டே

நீயெண்ணாக் காலத்திற்கும்

உன் ஆன்மா துடிக்கப் போகின்றது!


பிதிர்களைக் கூவியழைத்து

சாம்பலைக் கடலில் கரைத்த

பிதாவே கூறும்.


சகோதரரே நீர் கூறும்.


அவள் தான் எடுத்த மண்ணை

கடலில் ஏன் கரைத்தாள்.



12.04.1996

கருத்துகள் இல்லை: