20120321

இருள்

 

சிதழூறும் காயங்களிடையே

நானிருந்தேன்.

சிதைந்து போன மைந்தரின்

வேதனை ஓலங்கள் என்னை உறுத்தின

நான் வேதனையூற்றேன்!



தொலைதூரங்களில்

மறைந்து போகும் மைந்தரின் முகங்களை

நான் அறியேன்.

அந்த முகங்களில்

அறிவூ இருந்ததா அழகு இருந்ததா

என்று நான் கேட்கப் போவதில்லை!



கிளர்ந்த வேகத்தில்

கிடைத்த பஸ்ஸிலேறிய

இளந்தளிர்கள்

காற்றின் திசையில் அள்ளப்பட்டவர்

மேலொரு கேள்வியை எறிய

என்னால் இயலவில்லை!



நேற்றுங் கூட இருவர்

மாண்டு போயினர்

நான் விபரமாகக் கேட்கவில்லை.


கருணையூள்ளோரே கேட்டீரோ!

காகங்கள் கரைகின்றன

சேவல் கூவூகின்றது

காற்றில் மரங்கள் அசைகின்றன

மரணங்கள் நிகழ்கின்றன!



இன்று பிறந்த பூதம்

நாளைய கனவைத் தின்று தீர்த்தது

காவிய இருள் கவிந்திருந்தது!



காலந்தான் உருண்டது.

கனிகளைப் பறிக்க தொலைதூரம்

போனவரைக் காணவில்லை!


தொலைதூரம் போவதற்கு

கனவழிகள் சொன்னவரைக் காணவில்லை!

ஒளியைத் தேடும்

என் உணர்வூகளுக்கும் பதிலில்லை!


2

என்னை ஒறுத்து ஒறுத்து

அழித்துக் கொள்கையில்

என் மகன் போயிருந்தான்

தன்னை அர்த்தப்படுத்தவென்று.



என் கனவூகள் வீழவூம்

மண்ணின் குரலிற்கு

செவியீந்து போயிருந்தான்.


இயலாது

உன் பிரிவைத்தாங்க என்னால் இயலாது!

இல்லை

அவன் என்னிடம் இல்லை

மண்ணின் குரலிற்குப்

பதிலுடன் போயிருந்தான்!


என்னை உறுத்தும்

நினைவூகளைச் சொல்வேன்...

நொந்து போன என் நாட்களின்

வேதனைச் சுமையினைச் சொல்வேன்.....


சீதழூறும் காயங்கள் பேசும்

மொழியினில்

என்னைப் பேசவிடுங்கள்!


இறுதியாக

என்னிடம் வந்திருந்தான்

அவனது தேகம் குளிர்ந்திருந்தது.


இரத்த முறிஞ்ச நுளம்புகள் வரவில்லை

ஈக்களை அண்ட

நான் விடவில்லை!



11.12.1990.





வெளியீடு: சரிநிகர் இதழ் 77 ( 27 ஜூலை 1995)

கருத்துகள் இல்லை: