20120321

செவ்வல்

எதையும் தீண்டாமல் இதயம் பரிந்ததிரும்
என் கவலையெலாம் மொழி பெயர் சூட்டி
கொச்சைப்படுத்திவிடும் என்பது தான்!

அமைதியான வாழ்வைக் கற்பனை செய்வேன்.
கடலின் ஓரத்தில் வாடியமைத்து
என் கனவுகள் ஆழ்கடல் செல்லும்@

ஆனால் நான்
தூக்கி எறியப்பட்ட பாழ்பட்ட காதலன்
அவளிற்குத் தெரியாததல்ல
மெல்லிய வேதனையும் சுவடுபதிக்குமென!

என் வேதனையை ஒரு சொல்லாக ஏவுவேன்
மலராகச் செல்லட்டும்

என் பொருட்டு அவள் துயரப்படுவதை
நான் விரும்பவில்லை!
இதயம் அழுந்தித் துடிக்கும்
இனி இதமான தழுவல்கள் இல்லை!
மனம் நெகிழ்ந்த வார்த்தைகள் இல்லை!

இங்கு
எவருடைய ஓலங்களும் வேண்டாம்!
என்னிடம் எஞ்சிப் போன
நினைவுகளை நினைவில் கொணர்வேன்
என்னிதயத்தில் இரைச்சல் இல்லை

இன்னமும்
என்னிதயம் இசைக்கிறது!
அதோ செவ்வல் தெரிகிறது
எனக்குரிய வள்ளமும் நானுமாய்


29.06.1990


செவல் / செவ்வல்  - மீன்களின் கூட்டம்

வெளியீடு: சரிநிகர் இதழ் 61(09 டிசம்பர் 1994)

கருத்துகள் இல்லை: